மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் அருகே பால்குளம் கண்டன் சாஸ்தா திருக்கோயில் அருகே திருக்குளம் ஒன்று பாரம்பரியமாக பக்தர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பராமரிப்பு செய்ய உத்தரவு…
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் அருகே பால்குளம் கண்டன் சாஸ்தா திருக்கோயில் அருகே திருக்குளம் ஒன்று பாரம்பரியமாக பக்தர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் திருக்குளத்தில் திருவிழா நேரங்களில் ஆராட்டு வைபவம் நடக்கும். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் திருக்குளத்தில் ஐயப்ப பக்தர்கள் நீராடி வருகின்றனர்.
குளத்தின் அதிகப்படியான மழைநீர் செல்லாமல் குளத்தில் தேங்கி உள்ளதால் கழிவுகளால் மடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கழிவுநீர் போல் குளம் மாறியுள்ளது…இதனால் பொதுமக்கள் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு மிகுந்த வேதனை அடைகின்றனர். குளத்தை சுத்தம் செய்வதற்கு அப்பகுதியினர் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இன்று காலை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நேரடியாக சென்று குளத்தை ஆய்வு செய்தார் . குளத்தில் தேங்கி உள்ள நீரை அப்புறப்படுத்தி மடைகளை சீராக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது கோயில் ஸ்ரீ காரியம் செந்தில்குமார், திமுக வெள்ளிமலை பேரூர் செயலாளர் ரங்க ராஜா, ஐடி விங் ராஜா, சுந்தர், ரமேஷ், கல்யாணகுமார் உட்பட பக்தர்கள், சுற்று பகுதி மக்கள் உடன் இருந்தனர்.
–