தமிழ்நாடு வணிக சங்கங்களில் பேரவை நிறுவனத் தலைவர் வெள்ளையனின் புகழஞ்சலி கூட்டம் கன்னியாகுமரி சிஎஸ்ஐ கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது….
தமிழ்நாடு வணிக சங்கங்களில் பேரவை நிறுவனத் தலைவர் வெள்ளையனின் புகழஞ்சலி கூட்டம் கன்னியாகுமரி சிஎஸ்ஐ கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்வுக்கு மாநில செயல் தலைவர் எல்.எம். டேவிட்சன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் மாநில பொருளாளர் நியூ ராயல் பீர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் முன்னாள் தமிழக ஆயர் பேரவை தலைவர் பீட்டர் ரெமிஜியஸ் முன்னாள் எம்பி எம் சி பாலன் ராஜரிஷி பால பிரஜாபதி அடிகளார்
மாநில வழிகாட்டு குழு தலைவர் ஷேக் அகமது கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னாள் அமைச்சர் என் சுரேஷ் ராஜன் முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி டி செல்வகுமார் நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் குமரி மாவட்டம் மருந்து வணிகர்கள் சங்க தலைவர் ராஜன் திமுக வர்த்தக அணி இணை செயலாளர் தாமரை பாரதி மற்றும் தம்பி தங்கம் கருங்கல் ஜார்ஜ் பொன் ஆசை தம்பிஆகியோர்உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.நிகழ்வு குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு விடுத்துள்ள செய்தி குறிப்பில் தூத்துக்குடி மாவட்டம் பிச்சிப்பாளையத்தில் பிறந்து தமது 76 வது வயதில் அதே ஊரில் துகியில் கொண்டிருப்பவர் 50 ஆண்டுகளாக சில்லறை வணிகர்களுக்கும் சிறுதொழில் புரிவோர் உரிமைக்காகவும் போராடியவர் நம் தலைவர் வெள்ளையன் வருமானத்தை நாளை பார்ப்போம் தன்மானத்தை இன்று மீட்போம் என்று போராட்ட களம் கண்டவர் 41 ஆண்டுகளுக்கு முன்பாக அன்றைய அமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் கொண்டு வந்த நுழைவு வரியைஎதிர்த்து முதலில் சென்னையில் பின்பு தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் செய்து அரசேஅந்த வரியை திரும்ப பெற்றது அந்த நாள்தான் மே 5 அந்த வெற்றியை நாளை 41 ஆண்டுகளாக வணிகர் தினமாக மாநாடுகள் நடத்தி கொண்டாடிக் கொண்டிருந்தது நம் தலைவர் வெள்ளையன்
இந்தியனாகப் பிறந்து நீ இந்திய பொருளைத் தான் வாங்க வேண்டும் அந்நிய பொருளை புறக்கணிக்க வேண்டும் என்று வாழ்நாள் எல்லாம் முழங்கி வந்தவர் அண்ணல் காந்தியின் சிந்தனைகள் அகிம்சை சுதேசி கொள்கைகளை தனதாக்கி வாழ்ந்தவர் வணிகர்களின் உரிமைக்காக தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான கிலோமீட்டர் இரவு பகல் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் மீது பற்று கொண்டவர் விடுதலைப் போராட்ட வீரர்களை மாநாடுகளில் அழைத்து பாராட்டிய சிறப்பித்தவர் அனுவிஞ்ஞானி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை போற்றக்கூடியவர் குமரி மாவட்டத்தில் மதுவை எதிர்த்து செல்போன் டவர் ஏறி உயிர்விட்ட செல்ல பெருமாள் போராளியை பாராட்டி போற்றுபவர் முத்துக்குமார் மறைவுக்காக நீதி கேட்டவர் கூடங்குளம் அணு மின் நிலையம் எதிர்ப்பு போராட்டத்தில் குரல் கொடுத்தவர் நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட மரணமடைந்த அனிதாவுக்காக நீதி கேட்டவர் பழங்களை மரபணு மாற்றம் செய்த அன்னிய காய்கறியை புறக்கணிக்க வேண்டும் அது நம் மக்களின் ஆண்மையை பாதிக்கும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர்
இளநீர் இருக்கு பதநீர் இருக்கு கொக்கோகோலா பெப்சி எதற்கு என்று நச்சுத்தன்மை கொண்ட குளிர்பானங்களை எதிர்த்து பிரச்சார இயக்கமாக நடத்தி அதன் வியாபாரங்களை குறைத்து இயற்கை சார்ந்த பானங்களை மக்கள் பயன்படுத்த செய்தவர்.
காவி வேட்டி அணியாத இந்துவாகவும் சிலுவை அணியாத கிறிஸ்தவனாகவும் குல்லா அணியாத இஸ்லாமியராகவும் வாழ்ந்தவர் ஒரு காலத்தில் ரவுடிகளாலும் கட்டப்பஞ்சாயத்து நபர்களாலும் மிரட்டப்பட்ட வணிகர்களை தமிழகமெங்கும் வணிகச் சங்கங்கள் அமைத்து பாதுகாத்தவர் நம் தலைவர்
ஈழத் தமிழ் உணர்வாளர்களை போற்றக்கூடியவர் அந்நிய ஆதிக்கம் நம் நாட்டின் மீது எந்த நிலையில் வந்து விடக்கூடாது என்றும் அன்று வியாபாரம் செய்வதற்காக நாம் நாட்டுக்கு வந்த அந்நியன் நம் நாட்டை கைப்பற்றி நம்மை அடிமையாக வைத்திருந்தான் அதுபோல உலக வர்த்தகஒப்பந்தம்படி அந்நிய ஆதிக்கம் ஆன்லைன் வர்த்தகம் வழியாக நம் நாட்டு சில்லறை வணிகர்களையும் சுய தொழில் புரிபவர்களையும் பாதிக்கும் என்று தீர்க்கதரிசியாக 25 ஆண்டுகளுக்கு முன்னதாக கூறியவர்.
VAT GST தாக்கத்தையும் அதனால் வணிகர்கள் பாதிக்கப் போவதையும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை காண்பித்து நம் மக்களை ஆன்லைன் வர்த்தகம் நோக்கி இழுப்பவர்கள் அப்போது நம் சில்லறை வணிகர்களின் கடையை மூடிவிட்டு செல்ல வேண்டும் அதன் பிறகு வெளிநாட்டு கம்பெனிகள் வைப்பது தான் நிலை இந்த ஆகிவிடும் என்று கூறியவர்
உழைத்துப் பிழைக்கும் நமக்கு அரசின் சலுகைகள் வேண்டாம் நம் உரிமைகள் தான் வேண்டும் என்று முழக்கமிட்டவர் தமிழகம் எங்கும் உள்ள வணிகச் சங்க நிர்வாகிகளின் பெயர் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் பெயர்களை கூறி நலம் விசாரிப்பவர் எதிரியைப் பற்றி கூறும்போது கூட மரியாதையாக பேச வேண்டுமென்று அறிவுறுத்துபவர் தமிழக முன்னாள் ..முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மாநாட்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்ததும் அமைச்சர் பெருமக்களைமாநாட்டு அனுப்பி வைத்ததும் வணிகர்களை உரிமைகளை முன்னாள் முதலமைச்சர். கலைஞர்
வழியாக பெற்றவர்
1996 வது மாநாட்டில் கலைஞர் அவர்களின் மாநாட்டு வாழ்த்து செய்தியை மாநாட்டு திடலில் படிக்கப்பட்டதும் மாநாட்டு திடல் அதிரும் அளவிற்கு வணிகர்கள் ஆர்ப்பரித்தனர்
தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அன்பை பெற்றவர் மாநாடுகளுக்கு பல அமைச்சர்களின் கலந்து கொண்டு வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தவர்
எந்த அரசியல் கட்சிகளையும் மத இனத்தைச் சாராமல் வணிகர் நலம் மட்டுமே குறிக்கோள் என்று வாழ்ந்தவர்
கம்பீர மீசை ஓங்கி ஒலிக்கும் சிரிப்பு குழந்தை மனம் தனி மனித ஒழுக்கம் தன்னலம் கருதாத வாழ்க்கை முறை பணம் பொருட்டல்ல என்ற நிலைப்பாட்டோடு தனக்கென வாழாமல் வணிகர்களுக்காகவே மெழுகுவர்த்தியாய் தன்னை மாய்த்து வணிகர்களுக்காக வாழ்ந்தவர்
மத்திய மாநில அரசுகளின் வணிக விரோதக் கொள்கைகளுக்காக எதிர்த்து போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட முறை சிறை சென்றவர் கடையடைப்பு போராட்டம் சிறை நிறப்பு போராட்டம் அறப்போராட்டம் என்று அறவழிகளில் அகிம்சை வழியில் போராடுபவர்
சுனாமி பேரிடர் ஏற்பட்டபோது என் போன்றோரையும் நிர்வாகிகளையும் உடனடியாக மக்களுக்கு உதவி செய்யவும் மீட்பு நடவடிக்கைகளில் உதவிட உத்தரவிட்டவர் நம் தலைவர்
கொரோனா காலகட்டத்தில் அரசால் தனிமைப்படுத்தப்பட்ட வியாபாரிகளை மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த வேளையில் அந்த இடத்திற்கு நேரடியாக சென்று அவர்களின் தேவைகளையும் மருந்து வசதிகளையும் குரல் கொடுத்து பெற்றுக் கொடுத்தவர்
இதுபோல கொரோனா காலகட்டத்தில் தொடர் பணிகளால் இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டவர் தன் வணிகர் சங்கங்களின் பேரவையில் ஒவ்வொரு மாவட்ட மாநில நிர்வாகிகளுக்கும் வணிகர்களையும் போராளியாக உருவாக்கி வழி நடத்துபவர்
எளிமையான வாழ்க்கை முறை கதர் சட்டை எளிய எளிமையான சைவ உணவு இன்சொல் அவரின் தனி சிறப்பு நம் வாடிக்கையாளர் தான் நம் எஜமானர்கள் அவர்களுக்கு எந்த பிரச்சனையினாலும் பொது மக்களுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர் என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.