திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் சமீபத்தில் காலமான நாட்றம்பள்ளி காவல் நிலைய காவலர் அண்ணாமலை குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய ரூ.20,83,400/-நிதியுதவி தொகை வழங்கப்பட்டது….
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் சமீபத்தில் காலமான நாட்றம்பள்ளி காவல் நிலைய காவலர் அண்ணாமலை குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய ரூ.20,83,400/-நிதியுதவி தொகை மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா காவலர் அண்ணாமலை குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்ட நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் அண்ணாமலை கடந்த 29.04.2024 அன்று நடந்த சாலை விபத்தில் காலமானார்.. காவலர் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் அவருடன் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணை
உள்ளத்தோடு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டிய ரூ.20,83,400/- பணத்தை நன்கொடையாக பெற்று,அவற்றை வங்கி நிரந்தர வைப்புத் தொகைகள், ரொக்கம் மற்றும் மரக்கன்றுகள் என (23.10.2024) திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 2017ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா காவலர் அண்ணாமலை குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.