கல்வராயன் மலைவாழ் மக்களுடன் RGPRS அமைப்பு கலாச்சார கலந்தாய்வு முகாம்…
கல்வராயன் மலைவாழ் மக்களுடன்
RGPRS அமைப்பு
கலாச்சார கலந்தாய்வு முகாம்…
ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் இணைந்து
ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில்
(இரண்டு நாள் முகாம்)
கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு முகாம் நடைபெற்றது….
மலைவாழ் மக்களின் இல்லங்களில் உண்டு,உரையாடி,தங்கி அவர்களின் நிலை அறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மக்களின் கோரிக்கைகள் கேட்கபட்டது..
முன்னதாக சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏற்றப்பட்டும், மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.S.சசிகுமார்,புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதரசன்,பஞ்சாயத்துராஜ் தேசிய செயலாளர் கடலூர் க.ரமேஷ்,
மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் N.சுகுமார்,அண்ணாதுரை,ST பிரிவு மாநில பொது செயலாளர் சரவணன்,வாழப்பாடி மணிமாறன்..உடன்
தமிழ்நாடு மற்றும்
புதுவை மாவட்ட,
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், பஞ்சாயத்து ராஜ் காங்கிரஸ் நிர்வாகிகள் 100-கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்… நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பணியை
கள்ளக்குறிச்சி மாவட்ட பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் N.செந்தில்குமார் செய்திருந்தார்…..