திருப்பத்தூர் மாவட்டத்தில் PRO வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….!
திருப்பத்தூர் மாவட்டத்தில் PRO வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….!
பெரிய நிறுவனம் சிறிய நிறுவனம் என பாகுபாடு பார்த்து செய்தியாளருக்கு அரசு சலுகைகளை வழங்காமல் இருட்டடிப்பு செய்யும் திருப்பத்தூர் மாவட்ட பி.ஆர்.ஓ மற்றும் உதவி பி.ஆர்.ஓவை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் “தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கம்” சார்பில் கலந்து கொண்டு பி.ஆர்.ஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி தோழமை நிருபர்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஆர்பாட்டத்தில் கூட்டணி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பியும் தங்களது கோரிக்கையை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
அரசு நலத்திட்டத்திட்டங்களை செயல்படுத்துவதில் பெரிய , சிறிய பத்திரிக்கை என பாகுபாடு பார்பதையும் , அரசு செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லாமல் தடுக்கும் திருப்பத்தூர் மாவட்ட PRO சுப்பையாவின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம், PRO மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும், திருப்பத்தூர் பத்திரிக்கையாளர் சங்க போராட்டத்திற்கு திருப்பத்தூர் ,வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை யை சேர்ந்த “தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கம்” ஆதரவு அளிக்கும்,
இப்படிக்கு,
S. இளங்கோ,
மாநில தலைவர்,
தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கம்,
7418740600
செய்தியாளர்
சாமுவேல்