Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்துள்ள திருநாவுக்கரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்…
கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்துள்ள திருநாவுக்கரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷை பள்ளி நிர்வாகியும் தலைமையாசிரியருமான (ஓய்வு) க.ராம்குமார் வரவேற்று பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்தார். கடந்த வாரம் பள்ளிக்கு சிறப்பு பார்வையிட வந்த காவல் ஆய்வாளர் ரமேஷ் பள்ளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் பள்ளி சூழ்நிலை குறித்து தனது மனதில் தோன்றியதை கவிதையாக எழுதி வாழ்த்து மடலாக வழங்கினார்…மேலும் மாணவர்களுக்கு கல்வி வாசகங்கள் எழுதிய பேனாக்கள், பைல்களை பள்ளி நிர்வாகி ராம்குமாரிடம் வழங்கினார். மேலும் மாணவர்களுக்கு நிறைய உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.உடன் பள்ளி பொறுப்புத் தலைமை ஆசிரியர் ரா.ராதிகா இருந்தார்…
தலைமை செய்தியாளர்
JDPN