திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய ஒன்றாம் வகுப்பு பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முள்வேலி அமைக்கும் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய ஒன்றாம் வகுப்பு பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முள்வேலி அமைக்கும் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது…
வாணியம்பாடி, ஏப்.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், அம்பேத்கர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி(5 வயது சிறுமி) நேற்று முன்தினம் (11:04:2025) பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முள்வேலி அமைக்கும் தொழிலாளி விஜி (என்கின்ற) விஜயகுமார்(41) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரிடமிருந்து தப்பி சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இது குறித்து பள்ளி சிறுமியின் பெற்றோர் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் புகாரை வாணியம்பாடி அனைத்து மகளீர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விஜியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி