உலகின் எட்டாவது அதிசய சாலை இப்பொழுது திருப்பத்தூரில் அறிமுகம்..!
உலகின் எட்டாவது அதிசய சாலை இப்பொழுது திருப்பத்தூரில் அறிமுகம்..!
சாலையின் ஓரங்களில் மரங்களை நட்டது அந்த காலம், மின்சார கம்பங்களை நடுவில் நடுவது இந்த காலம்…!
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதூர் நாடு சாலை முதல் மாம்பாக்கம் சாலை வரை (மட்றபள்ளி வழியாக) ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மிகச் சிறப்பாக சாலை அமைத்திருக்கிறார்கள். இந்த சால அமைக்கப்பட்டதன் பயனாக அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த மகிழ்ச்சி தற்பொழுது நீடிக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.
தனியார் பள்ளிக்கு அருகே சாலையின் நடுவே மின்சார கம்பம் அகற்றப்படாமலேயே சாலை அமைத்திருக்கிறார்கள். அந்த சாலை வழியாக பயணிக்கின்ற வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அருகிலேயே வழிபாட்டுத் தலமும் உள்ளது. அந்த வழியாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், ஆயிரக்கணக்கான மக்களும் பயணித்து வருகின்ற இந்த சூழலில் உடனடியாக அபாயகரமான அந்த மின்சார கம்பத்தை மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
(குறிப்பு: *ஏதாவது விபத்து ஏற்பட்டால், ஒவ்வொரு துறையும் நான் பொறுப்பல்ல கைகாட்டி விடுவார்கள். சாவது என்பது பொதுமக்கள் தானே*?)
தோழமையுடன்
“நம் மக்களின் குரல்”
பொம்மிகுப்பம் ராதாகிருட்டிணன் மாவட்ட செயலாளர் (திருப்பத்தூர்)
“தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்”
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ் காந்தி