திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டாட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டாட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி
முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது…
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-தாராபுரம் ,காங்கேயம் உட்பட்ட பகுதிகளில் வாழும் எஸ்.சி.,எஸ்.டி மக்களுக்கு வழங்கக் கூடிய தாட்கோ கடனுதவிகளை வங்கிகள் வழங்காமல் புறக்கணிக்கின்றனர். அது போன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் தங்கி படிக்கும் விடுதியில் உள்ள மாணவர்களுக்கு ஒருநாள் உணவுப்படி ரூபாய் 48 இலிருந்து 50 வரை மட்டுமே வழங்கப்படுகிறது… இதனால் விடுதிகளில் தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை. எனவே உணவுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்..ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் சுற்றுச்சுவர் கட்டப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் அதில் இடம்பெற்றது… நிகழ்வின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாராபுரம் நகர செயலாளர் செந்தில்குமார்,மாநில விவசாய அணியை சேர்ந்த தமிழ் வேந்தன், மாவட்ட துணை செயலாளர் ஆற்றல் அரசு,நகர துணை செயலாளர் உதயகுமார், நகர அமைப்பாளர்கள் திருநாவுக்கரசு,ராவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
செய்தியாளர்
அன்பழகன்