கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம், காரமடை ஒன்றியம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தனித்துவமான ஓர் அரசுப் பள்ளி….
கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம்,
காரமடை ஒன்றியம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
தனித்துவமான ஓர் அரசுப் பள்ளி
மாநில அரசின் சிறந்த பள்ளிக்கான (2018) விருதைப் பெற்ற பள்ளி.
L.K.G வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி.
SMART TV. SMART BOARD வசதி உள்ளது…
எண்ணும் எழுத்தும் கல்வி மற்றும் படைப்பாற்றல் முறை வழிக் கல்வி.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள்,காலணி,கலர்பென்சில், புத்தகப்பை, பஸ்பாஸ், ஜாமெண்ட்ரி பாக்ஸ், அட்லஸ் புத்தகம், சிறப்பு கல்வி உதவித் தொகை, அரசு மருத்துவக் குழவினர் மூலம் மாதந்தோறும் உடற்பரிசோதனை.
மாநில அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் கடத்த நான்கு ஆண்டுகளில் 12-க்கும் மேற்பட்ட எங்கள் மூலத்துறைப் பள்ளி மாணவர்கள் இலவச பொறியியல் கல்வி (FREE ENGINEERING COURSE) பயில்கின்றனர்.
மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் அதிகப்படியான பரிசுகளைப் பெற்றதும், செய்தித்தாள்களின் பக்கங்களை அதிக முறை அலங்கரித்ததும் இந்த பள்ளிதான்.
அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலமும், மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமும் மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை.
மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வானவில் மன்றம், தனித்திறமைகளை வளர்க்க இலக்கிய மன்றம் & சிறார் திரைப்பட மன்றம்.
2024-25ஆம் கல்வி ஆண்டில் மாநில அளவிலான வானவில் மன்ற செயல்திட்டப் போட்டியில் வென்று பள்ளியின் மாணாக்கர்கள் 3 பேர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கு தேர்வாகியுள்ளனர்.. 2025-2026 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது…
செய்தியாளர் R.ராஜேஷ்.