Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வடதாரையில் புதிதாக ரூ.22 லட்சம் மதிப்பிலான கட்டப்பட்ட கிளை நூலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வடதாரையில் புதிதாக ரூ.22 லட்சம் மதிப்பிலான
கட்டப்பட்ட கிளை நூலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…

நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்…விழாவுக்கு தாராபுரம் நகராட்சி மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றினார்…தாராபுரம் நகர திமுக செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்…இந்த நூலகத்தில் 35 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் இருப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது… மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 12 கணினிகள் வைக்கப்பட்டுள்ளது.நூலக வாசகர்கள் படிப்பதற்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் 2 ஆயிரத்து 259 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.திறப்பு விழாவில் மூன்றாம் நிலை நூலகர் நாகராஜன், இரண்டாம் நிலை நூலகர் அரவிந்தன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், வாசகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அன்பழகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button