திருப்பத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் தினத்தை முன்னிட்டு பொம்மிகுப்பம் கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் தினத்தை முன்னிட்டு பொம்மிகுப்பம் கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் ஊராட்சியில் தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் 29.03.25 சனிக்கிழமை காலை 11:00 மணியளவில் பொம்மிக்குப்பம் ஊராட்சியில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் நடைபெற்றது… கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவி தேன்மொழி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது… கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார்,கிராம நிர்வாக அலுவலர் அறவேந்தன் மற்றும் திட்டப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் அசோகன் முன்னிலை வகித்தனர் ..ஊராட்சி மன்ற செயலாளர் ஆனந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தின் பார்வையாளராக மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சசிகுமார் கலந்து கொண்டார்…கூட்டத்தின் பொருளாக தண்ணீர் தினத்தில் நாம் சுற்றுப்புற சூழலை எப்படி சுகாதாரமாக வைத்துக் கொள்வது? மரம் வளர்ப்பது, மழைநீர் சேகரிப்பது உள்ளிட்ட மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்தார். பல்வேறு கோரிக்கைகள் கிராம சபா கூட்டத்தில் வைக்கப்பட்டது…அதன் அடிப்படையில் விவாதிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது… இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருட்டிணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்…நிகழ்ச்சி மூன்றாவது வார்டு உறுப்பினர் மணிகண்டன் நன்றி கூறினார்….
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி