கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள கருவளர்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் தலைமை ஆசிரியர் சே.ஆரோக்கியமேரியின் பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள கருவளர்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் தலைமை ஆசிரியர் சே.ஆரோக்கியமேரியின் பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கி.இரவி
தலைமையில் நடைபெற்றது…. நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் G.K.இராஜூ,முனைவர்.
துபாய் மூர்த்தி, இரா.ஆனந்த், திருக்குறள் அரிமா சங்கத்தினர்,வள்ளலார் அரிமா சங்க மண்டல பொறுப்பாளர் இரவி, ஆசிரியர் பயிற்றுனர் பூங்குழலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் இ ராஜு
மரக்கன்றுகள் நட்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். குறிப்பாக புத்தகம் வாசித்தலும் அதனால் மாணவ சமுதாயத்திற்கு வருங்காலத்தில் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் கைபேசி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அதைப் பயன்படுத்த உறுதுணையாக இருக்கும் தனது காவல்துறை பாணியில் அன்பாக அறிவுரை கூறினார். ஓய்வு பெறுகின்ற தலைமை ஆசிரியர் சே.ஆரோக்கியமேரிக்கு கணையாழி அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
ஊராட்சி மன்றத் தலைவர் கி.இரவி முன்னாள் மாணவர்கள் , ஆசிரியர்கள் , ஆனந்த் (துபாய்) மூர்த்தி ஆகியோர் பள்ளியை சர்வதேச பள்ளிக்கு இணையாக AC வசதி செய்த தர இசைந்துள்ளார்கள். மாணவர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் காலணிகள், வாட்டர் பாட்டில்,விருதுகள் வழங்கப்பட்டது…நிகழ்ச்சியில் 500 கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் உணவு ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் கி.இரவி சொந்த பொறுப்பில் செய்து கொடுத்தார். மாணவர்களின் பிரம்மாண்டமான கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நல்லாசிரியர் ப.அறிவுடைநம்பி விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முக்கிய நிகழ்வாக ஆசிரியர்களும் நடனமாடி மகிழ்வித்தனர்… சிலம்பம் செல்வி கீர்த்தனாவின் சிறப்பான சிலம்பாட்டம் நடைபெற்றது.மாணவர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் கலை நடன பயிற்சி களை செல்வி ப.அட்சயா மற்றும் செல்வி இராஜஸ்ரீ ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா இறுதியில் சிறப்பாக நாட்டுப் பன்னுடன் இனிமையாக முடிந்தது.
தலைமை செய்தியாளர்
JDPN