தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கும்பகோணத்தில் உள்ள கலைஞர் கோட்டத்தில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு…
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கும்பகோணத்தில் உள்ள கலைஞர் கோட்டத்தில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு…
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கும்பகோணம் பைபாஸ் சாலையில் உள்ள கலைஞர் கோட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக நிர்வாகிகள் நசீர் முகமது,ஜெ.நடராஜன் ஆகியோர் தலைமையில் குடந்தை மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் வேண்டுக்கோளுக்கிணங்க தமிழ்நாட்டு நலன்களையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுப்பட்டு போராடுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் ராஜா, செல்வராஜ்,கெளரி, ஒன்றிய நிர்வாகிகள் இளங்கோவன்,நேரு, தங்க.தியாகராஜன், சண்முகம்,பன்னீர் செல்வம்,மாவட்ட மகளிர் அணி வலைதளப் பொறுப்பாளர்கள் சுமதி,சுடர்விழி பழனிவேல் மற்றும் மாணவரணி, இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு அனைவருக்கும்
இனிப்பு வழங்கப்பட்டது.தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள் கும்பகோணம் மாநகரத்தில் உள்ள 48 வார்டுகளிலும் அனைத்து பேரூர் கழகங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது….
தலைமை செய்தியாளர் JDPN