Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான “தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு” நிகழ்வில் இரண்டாம் கட்ட நிகழ்வாக நிலப்பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது…

திருப்பத்தூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான “தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள்
கணக்கெடுப்பு” நிகழ்வில் இரண்டாம் கட்ட நிகழ்வாக நிலப்பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது…

கடந்த ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது… அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் வன கோட்ட மாவட்ட வன அலுவலர் மு.மகேந்திரன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் கு.ரா.சோழராஜன் வழிகாட்டுதலின் படி, வனவர்.
ல.தயாநிதி தலைமையில் 15-03-25 ஆம் தேதி அன்று முதன்முறையாக இரவு இரவாடி பறவைகள் (Nocturnal Birds ) பற்றிய கணக்கெடுப்பு அகரம் ஊராட்சி கரம்பூர் அடுத்த வடுகமுத்தம்பட்டி கிராம பகுதியில் இரவு 07:00 மணி முதல் இரவு 09:30 மணிவரை நடைபெற்றது…இதில்
கூகை ஆந்தைகள்,
காட்டு சிறுபுள்ளி ஆந்தைகள்,
இராகொக்குகள்,
காட்டு பக்கிகள்,
பழந்திண்ணி வவ்வால்கள் உள்ளிட்ட இரவாடி பறவைகள் கணக்கெடுத்தல் நடைபெற்றது…

16-03-25 ஆம் தேதி நிலப்பறவைகள் கணக்கெடுத்ததில்,
கானக மயில்கள்,
குயிலினங்கள்,
சிவப்பு வளைய பச்சை கிளிகள்,
பருந்துகள் & கழுகுகள்,
சின்னான்கள்,
சிலம்பன்கள்,
வர்ண கௌதாரிகள்,
தேன் சிட்டுகள்
புள்ளிப்புறாக்கள்,
நெட்டைகாளிகள்,
பணங்காடைகள்,
பஞ்சுருட்டான்கள்,
கருப்பு வெள்ளை மைனாக்கள்,
கரிச்சான்கள்,
கதிர் & புதர் சிட்டுகள்,
சோலைபாடிகள்
உள்ளிட்ட 65 வகை நிலப்பறவைகளும்,
650-700 எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் இதில்
வனக்காப்பாளர் மணிகண்டன்,கிரீன் கமிட்டி மாவட்ட உறுப்பினர் பசுமை சத்யராஜ் , தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் பொம்மிகுப்பம் ராதாகிருஷ்ணன்,இயற்கை மீட்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்புசெல்வம், புகைப்படக் கலைஞர்கள் திருமலைவாசன், நிரஞ்சன்,பறவை ஆர்வலர்கள்,தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் மார்ட்டின் பிரிட்டோ தாஸ்,பவித்ரா, ஜெயப்பிரதாஸ், தமிழ்ச்செல்வம், மற்றும் பறவை ஆர்வலர்களில் முன்னோடி திருப்பத்தூர் இதரீஸ் அஹ்மத் உள்ளிட்ட ஏராளமான பறவை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button