Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 15.03.2025 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 15.03.2025 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து நீண்ட நாளாக நிலுவையில் இருந்து வந்த பிடி கட்டளைகளை (NBW Warrant) நீதிமன்றத்தில் நிறைவேற்றியதற்காகவும், POCSO வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காகவும், காணாமல் போனவர்களின் வழக்குகளை விசாரணை செய்து அவர்களை கண்டுபிடித்தமைக்காகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.