மலேசியாவில் வள்ளி கும்மி ஆட்டம்…
மலேசியாவில் வள்ளி கும்மி ஆட்டம்…
கோவை மாவட்டம் அன்னூர் பகுதி பெண்கள் மலேசியாவில் வள்ளி கும்மி ஆட்டம் ஆடி
அசத்தல்…
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த பெண்கள் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்… அன்னூர் வட்டாரத்தில் கிராமப்புறங்களில் சிறுவர்,சிறுமியர்,ஆண்கள்,பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் வள்ளி கும்மி ஆட்டம் பயிற்சி பெற்று வருகின்ற நிலையில் பயிற்சி முடிதவர்களின் அரங்கேற்றம் கோவில் வளாகங்களில் நடத்தப்படுவது வழக்கம்…
இந்நிலையில் “திருக்குறள் கும்மியை” அறிமுகப்படுத்திய வள்ளி முருகன் கலைக்குழு சார்பில் பெண்கள்,ஆண்கள் என 50 பேர் கடந்த வாரம் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் முன் நடந்த கலை நிகழ்ச்சியில் திருக்குறள் பாடலுக்கு ஏற்ப பயிற்சி ஆசிரியர் பல்லடம் பழனிசாமி தலைமையில் நளினமாக வள்ளிகும்மி ஆட்டம் ஆடி பார்வையாளர்களை பரவசபடுத்தினர். இந்நிகழ்ச்சியில் இணை ஆசிரியர்கள் ரங்கநாதன் மற்றும் தயாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்…