தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் எட்டாவது வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறி முதல் மாதிரி தேர்வில் வெற்றி பெற்ற ஒன்பது மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது….
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் எட்டாவது வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறி முதல் மாதிரி தேர்வில்
வெற்றி பெற்ற ஒன்பது மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது….
ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆலங்குளம் வட்டார அளவிலான நடுநிலைப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள பள்ளிகளில் எட்டாவது வகுப்பு பயிலும் என்.எம்.எம்.எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி திறனறி தேர்வுக்கான தொடர் விடுமுறை நாள் பயிற்சி வகுப்புகள் கடந்த மூன்று மாத காலமாக நடந்து வருகிறது… இந்நிலையில் வருகிற பிப்ரவரி 22 ல் தமிழகம் முழுவதும் அரசு தேர்வு நடத்த உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் 48 ஆயிரம் மாணவரின் வங்கி கணத்தில் அரசு சார்பில் வரவு வைக்கப்படும்.எனவே இத்தேர்வுக்கான முன் தயாரிப்புக்காக மாநில அளவில் தயாரிக்கப்பட்ட என.எம்.எம் எஸ் மாதிரி தேர்வு-1(மாக் டெஸ்ட்) நடத்தப்பட்டது. இத் தேர்வில்137 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இத்தேர்வில் மேட் சேட் என்ற இரண்டு தேர்விலும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட தலைவர் ஆரோக்கியராசு தலைமை வகித்தார். நடந்த இம் மாதிரி தேர்வில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வந்தனா முதல் பரிசும் ,ஆலடிப்பட்டி எஸ்.வி.எஸ் உயர்நிலைப்பள்ளி மாணவி யாழினி இரண்டாம் பரிசும்,ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி திலக் மூன்றாம் பரிசு ம்..அதைத்தொடர்ந்து மதிப்பெண் அடிப்படையில் இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற புதுப்பட்டி டி.டி.ஏ நடுநிலைப்பள்ளி மாணவி கனிஷ்கா ஜெசிந்தா,நேன்சி,யோகவா இனிசன், ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்வினி, ஆலடிப்பட்டி எஸ்.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி இன்சியா ஆகியோருக்கு பரிசுகளை அய்யனார்குளம் ஆங்கில பட்டதாரி ஆசிரியரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலங்குளம் வட்டார தலைவருமான மயில் ராஜ்,பயிற்சி கருத்தாளர்கள் சதன் ரயில்வே செல்வநாதன், பட்டதாரி ஆசிரியர் செல்வகுமார் ஆகியோர் வழங்கினர். விழா இறுதியில் ஆசிரியர் அந்தோணிசாமி நன்றி கூறினார்..ஆலங்குளம் பயிற்சியில் அடுத்த மாநில அளவிலான தொடர் மாதிரி தேர்வுகள் ஜனவரி 25 பிப்ரவரி 01,08,15, ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் தேர்வுக்கு குறைந்தகாலமே உள்ளதால் சனி ஞாயிறு மற்றும் பிற விடுமுறைகளில் தொடர்ந்து நடைபெறும் சிறப்புபயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகளில் என்.எம்.எம்.எஸ் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து பயன் பெற வேண்டுமென பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறார்கள்.