நாகா்கோவில் வடசேரி அருள்மிகு ஆவுடையம்பாள் சமேத தழுவிய மகாதேவா் திருக்கோயில் மாா்கழி பெருந்திருவிழா நடைபெற்று வருகின்றது….
நாகா்கோவில் வடசேரி அருள்மிகு ஆவுடையம்பாள் சமேத தழுவிய மகாதேவா் திருக்கோயில் மாா்கழி பெருந்திருவிழா நடைபெற்று வருகின்றது….6-ஆம் திருவிழாவில் மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா சத்தியம் வத என்ற தலைப்பில் அருளுரை வழங்கினார்.தொடர்ந்து நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியினை
பூசலாா் நாயனாா் சேவா சங்கத் தலைவா் முத்தரசு,செயலா் சிவகுமாா்,வள்ளலார் பேரவை துணைச் செயலாளர் அங்ரி சுஜித் ஆகியோர் முன்னிலையில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். சிறப்பாக நாட்டியம் நல்கிய ஸ்ரீஅட்சியா நிருத்யாலயா நாட்டியப் பள்ளி மாணவியர்கள் குரு டி.எம்.அட்சியா,பவித்ரா மற்றும் கவிதாலயா நாட்டியப்பள்ளி மாணவி பி.எஸ்.பிரயோஷிகா ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.தொடர்ந்து இரவு 09.30 மணிக்கு சுவாமி கஜ வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.