திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 1800 ஏழை, எளிய குடும்பங்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பொங்கல் கொண்டாட்டம்..
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 1800 ஏழை, எளிய குடும்பங்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பொங்கல் கொண்டாட்டம்..
திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும்,மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி அறிவுறுத்தலின்படி வருகிற 16.01.25 அன்று எம்.ஜி.ஆர் மற்றும் 24.01.25அன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் பொன்.ஏழுமலை ஆசிரியர் நினைவாக கந்திலி கிழக்கு ஒன்றியம் உடையாமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்குப்பம் கிராமத்தில் அதிமுக உறுப்பினர் ஸ்ரீதர் தலைமையில் ஏழை,எளிய மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் உடையாமுத்தூர்,கீழ்குப்பம்,குரும்பர் தெரு,மாங்குட்டை,சமத்துவபுரம்,அண்ணா நகர்,தண்ணீர்பந்தல் உள்ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 1800 ஏழை,எளிய பொதுமக்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பொங்கல் விழா கொண்டாப்பட்டது.
நிகழ்ச்சியில் சபரி,சூர்யா,கிளை செயலாளர் சேட்டு,குரும்பர் தெரு விஜயன்,சுப்பிரமணி,குள்ளன்,செவ்வாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிளை செயலாளர்கள் சுப்பிரமணி,கோபால்,சக்திவேல்,அன்பரசன்,கௌரவன்,வேடியப்பன்,கோவிந்தசாமி,ரவி,மூர்த்தி மற்றும் கந்திலி கிழக்கு ஒன்றிய அமைப்பு சாரா தலைவர் திம்மராயன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.