அகில இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்…
அகில இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்..
அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட கிளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று 28.12.24 மாலை அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் தேசிய தலைவர் பெரியண்ணன் தலைமையில் திண்டிவனம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் துரை ராஜமாணிக்கம்,அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இதயகீதம் ராமானுஜம், இணைச்செயலாளர் கமலா முருகன்,செங்கல்பட்டு கிளையின் தலைவர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் பூங்கோதை ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது…
கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இதயம் கிருஷ்ணா வரவேற்புரை ஆற்றினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைவராக உளுந்தூர்பேட்டை முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் அருணா தொல்காப்பியன், செயலாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இதயம் கிருஷ்ணா, பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆலோசகர்களாக கல்வராயன்மலை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மலரடியன்,கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக மதிவாணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்..
துணைத் தலைவராக சங்கை தமிழ்ச் சங்கத்தின் காப்பாளர் இலட்சுமிபதி,துணை செயலாளராக அகவை முதிர்ந்த தமிழறிஞர் வெங்கடாஜலபதி, சங்கை தமிழ்ச் சங்கத்தின் செயலர் சாதிக் பாஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்…
செய்தித் தொடர்பாளராக கலைமகள் காயத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..
உறுப்பினர்களாக சின்னசேலம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிதை தம்பி, அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சௌந்தர்ராஜன், கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் ராஜ்குமார் தாமோதரன்,கல்லமேடு பாடகி பாக்கியலட்சுமி, கருணாநிதி,கவிமணி பாலன்,கவிஞர் காசி செல்வராசு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்..
நிகழ்வில் மாநில நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட் அனைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கிளை உறுப்பினர்களுக்கும் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
பொருளாளர் சாந்தகுமார் நன்றி கூறினார்…
நிகழ்ச்சியை கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் செ.வ.மதிவாணன் தொகுத்து வழங்கினார்.