கரூர் மாவட்டம், ஊரக உட்கோட்டம்,பரமத்தி காவல் நிலைய சரகம் பரமத்தி வீரமெஸ் அருகிலும்,பவித்திரம் வானவெளி பிரிவு அருகிலும் கடந்த 10.12.2024 ம் தேதி இரவு அந்த வழியாக வந்த இரண்டு வட மாநிலத்தவரிடம் செல்போன் மற்றும் பணத்தை அடையாளம் தெரியாதவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்றது தொடர்பாக பரமத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுப்படி,ஊரக உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்து சந்தேக நபர்களின் அலைபேசி எண்களை ஆராய்ந்து வழக்கில் தொடர்புடைய எதிரி கார்த்திக்(24), S/O தங்கராஜ்,19/Ac ஜோசியக்கார தெரு, வெங்கமேடு,கரூர் மாவட்டம் என்பவரை 27.12.2024 தேதி கைது செய்யப்பட்டு 02 செல்போன்கள் மற்றும் அவன் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.குற்றவாளி மீது ஈரோடு மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
கரூர் மாவட்டம், ஊரக உட்கோட்டம்,பரமத்தி காவல் நிலைய சரகம் பரமத்தி வீரமெஸ் அருகிலும்,பவித்திரம் வானவெளி பிரிவு அருகிலும் கடந்த 10.12.2024 ம் தேதி இரவு அந்த வழியாக வந்த இரண்டு வட மாநிலத்தவரிடம் செல்போன் மற்றும் பணத்தை அடையாளம் தெரியாதவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்றது தொடர்பாக பரமத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுப்படி,ஊரக உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்து சந்தேக நபர்களின் அலைபேசி எண்களை ஆராய்ந்து வழக்கில் தொடர்புடைய எதிரி கார்த்திக்(24), S/O தங்கராஜ்,19/Ac ஜோசியக்கார தெரு, வெங்கமேடு,கரூர் மாவட்டம் என்பவரை 27.12.2024 தேதி கைது செய்யப்பட்டு 02 செல்போன்கள் மற்றும் அவன் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.குற்றவாளி மீது ஈரோடு மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.