தூத்துக்குடி மாவட்டம் கூடங்குளம் அணுக்கழிவுகளால் கதீர்வீச்சு அபாயம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு பேச்சு..!
தூத்துக்குடி மாவட்டம் கூடங்குளம் அணுக்கழிவுகளால் கதீர்வீச்சு அபாயம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு பேச்சு..! கூடங்குளம் அணுக்கழிவுகள் தென் தமிழக பகுதிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்… நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அப்பாவு “தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் தாது மணவில் கதிர்வீச்சு இருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகள் நமக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏற்கனவே கூடங்குளத்தில் செயல்பாட்டில் இருக்கும் 1 மற்றும் 2-ம் அலகுகளில் கழிவுகள் நிறைந்துவிட்டன. அவற்றை என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.இந்த அச்சுறுத்தல் தென் தமிழக பகுதிக்கு இருக்க கூடாது. ராஜஸ்தான் பாலைவனம் போன்ற பகுதிகளுக்கு அதை கொண்டு சென்றால், இந்த பகுதி மக்கள் கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.