உள்ளூர் செய்திகள்மதம்
திருவனந்தபுரத்தில் வருடம் தோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது….
திருவனந்தபுரத்தில் வருடம் தோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்…பத்து நாட்கள் வெகு விமர்சையாக நவராத்திரி திருவிழா திருவனந்தபுரத்தில் முடிந்த பின்பு அங்கிருந்து கிளம்பி மீண்டும் சுசீந்திரம் வந்தடையும்.. வழக்கம்போல இந்த ஆண்டு திருவிழாவிற்காக முன்னுதித்தநங்கையம்மன் 30.09.24 காலை 7.15 மணியளவில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ரத வீதியை வலம் வந்து புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் இந்து அறநிலைத்துறை தலைவர் ராமகிருஷ்ணன் சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, திமுக பேரூர் செயலளார் சிற்பி சுதே.சுந்தர்,மகளிரணி சைலா அய்யப்பன், அறநிலையதுறை உறுப்பினர்கள் சுந்தரி ராஜேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்…