உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்…!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனு மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனு மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா.இ.கா.ப உத்தரவின் பேரில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது… கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக 31 மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும் புதன்கிழமையில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் காவல் நிலைய புகார் மீது திருப்தி பெறாத புகார்தார்கள் நேரில் ஆஜராகி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button