திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கேத்தாண்டப்பட்டி,பெரிய கண்ணியம் பட்டு, காவேரிப்பட்டு,கூத்தாண்ட குப்பம்,பெரிய மோட்டூர்,சின்ன மோட்டூர்,பெத்த கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களைச் சார்ந்த பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன்,துரை ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் திருப்பதி,ஜின்னத் மாலா சேகர்,ஜெயலட்சுமி சுரேஷ்,கமலநாதன்,குப்பம்மாள் ஆனந்தன்,மங்கம்மாள் சத்தியமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜனனி மோகன்ராஜ், செந்தில்,எழிலரசி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜோலார்பேட்டை சேர்மன் சத்யா சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். முகாமில் மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை,சமூக நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,காவல்துறை,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என பல துறைகள் பங்கேற்றது. துறைகள் வாரியாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. 500 கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 200-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட்டு உடனடி தீர்வு கண்டனர்.மேலும் இதர மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விசாரணை அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டனர்.மின் இணைப்பு,பட்டா மாற்றம்,மகளிர் உரிமைத் தொகை,தாட்கோ போன்ற திட்டங்களுக்கு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் உடனடியாக தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வழங்கினார்கள்.முகாமில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்,வட்டார வருவாய் அலுவலர் அன்னலட்சுமி,மேற்கு செயலாளர் சதீஷ்குமார், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முகாமில் இறுதியாக கேத்தாண்டப்பட்டி ஊராட்சி செயலாளர் மேகநாதன் நன்றியுரை வழங்கினார்…